காகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுதான்

179

ஒற்றுமை பற்றி சிறந்த பாடத்தை மனிதனுக்கு கற்பிக்கும் ஒரு பறவை தான் காகம். அத்தகைய காகம் உணர்த்தும் மரணம் மற்றும் கெட்ட சகுனத்தின் சில அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.

காகம் உணர்த்தும் சகுனத்தின் அறிகுறிகள் என்ன?
  • காகம் ஒருவரது வாகனம், குடை, காலணி அல்லது உடல் மீது தன் சிறகால் தீண்டினால், அவர்களுக்கு அகால மரணம் நேரிடுமாம்.
  • ஒருவரின் எதிரே காகம் வலபக்கம் இருந்து இடபக்கம் சென்றால், அது தன லாபம் கிட்டும். அதுவே இடபக்கம் இருந்து வடபக்கம் சென்றால், அது தன நஷ்டம் உண்டாக்குமாம்.
  • ஒருவர் பயணித்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களின் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால், அந்த பயணத்தை தவிர்க்க வேண்டும்.
  • ஒருவர் வெளியில் செல்லும் போது, ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை பார்த்தால், அது இனிதான செயலை குறிக்கும் சகுனமாம்.
  • காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால், அது லாபம். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது தயிர், எண்ணெய், உணவு போன்றவற்றில் லாபம் கிடைக்குமாம்.
  • காகம் மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது மது, நெல், முத்து, பவளம் கடல் விளை பொருட்கள் அதிகம் கிடைக்கும். அதுவே வடக்கு திசை நோக்கி கரைந்தால், அது ஆடைகள், வாகனம் ஆகியவற்றில் லாபம் கிடைக்குமாம்.
SHARE