இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான காக்கா முட்டை பல விருதுகளை வென்று மக்களையும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜூலை 9ம் தேதி இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அறகட்டளை ஒன்றை பாலசந்தர் பெயரில் கமல்ஹாசன் அவர்கள் திறக்க உள்ளார், மேலும் தற்போது சாதனை புரிந்து வரும் சின்னத்திரை ,வெள்ளித்திரை , நாடக கலைஞர்களுக்கு பாலசந்தர் விருது வழங்க பட உள்ளது.
இதை எஸ் .பி முத்துராமன் தலைமையில் தேர்வு செய்துள்ளனர், இதோ முழு விவரம்
கே.பாலசந்தர் நாடக விருது – மூத்த கலைஞர் திரு.காத்தாடி ராமமூர்த்தி
கே.பாலசந்தர் திரை விருது – திரு.மணிகண்டன் இயக்குநர் ”காக்கா முட்டை”
கே.பாலசந்தர் சின்னத்திரை விருது – திரு.திருமுருகன் இயக்குநர் & தயாரிப்பாளர் பாலகைலாசம்
சின்னத்திரை விருது – திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்.
இவ்விருதை வழங்க இருக்கிறார் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. சரத்குமார்.