காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்

118

 

 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.

இதனால் ஹமாஸ் அமைப்பு தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து இஸ்ரேல் மந்திரி சபை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்யஒப்புதல் வழங்கியது.இந்நிலையில், காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம்.காசாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்க மனிதாபிமான போர் நிறுத்தம் உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

SHARE