காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் : பத்து இஸ்ரேலிய படையினர் பலி

98

 

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்ந்து ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.கட்டிடமொன்றில் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொண்ட படையினரை காப்பாற்ற முயன்ற படையினரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.

காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

SHARE