காட்சிப்படுத்தப்படும் முன்னாள் ஜனாதிபதிகளின் குண்டு துளைக்காத வாகனங்கள்

506

முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்களை கொழும்பு ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையில் கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

8 வாகனங்கள் இவ்வாறு கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத 8 வாகனங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த அதிசொகுசு வாகனங்கள் திருத்தங்களுக்கு உட்படுத்தி பயன்படுத்த முடியாதமையினாலும், விற்பனை செய்ய முடியாமையினாலுமே கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் ஏலவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE