காட்டுயானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி

331
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவருடன் மற்றுமொருவரும் விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற காட்டு யானை மேற்படி குடும்பஸ்தரை தாக்கியுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவருடன் சென்ற மற்றைய நபர் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

SHARE