காட்டு யானையினால் பொருட்கள் சேதம்

272

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தினுள் புகுந்த காட்டுயானை பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் வி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழமை போல பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலையை பூட்டிவிட்டு சென்றதாகவும், இன்று காலைப் பார்த்த போது பாடசாலையின் வேலியை உடைத்து பொருட்களை காட்டுயானை சேதப்படுத்தியுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தும்பங்கேணிக்கிராமத்தில் அதிகாலை ஒரு மளியளவில் புகுந்த தனியன் காட்டு யானை ஒன்றினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த காட்டு யானை பாடசாலையிலும் சேதங்களை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற மாலை நேர வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரும் காட்டுயானை தாக்குலுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தார்.

இப்பிரதேசத்தில், அண்மைக்காலமாக அதிகளவில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE