ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் செல்லும் பாதையில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி கைக்குழந்தையொன்றும், அதன் தாயும் காயமுற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நேற்றிரவு ஹம்பாந்தோட்டையை அண்மித்த கட்டுவெவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பமொன்று தமது காரில் நேற்றிரவு ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமத்திற்குச் பயணமாகியுள்ளனர். செல்லும் வழியில் கட்டுவெவ பிரதேசத்தில் காட்டுக்குள் இருந்து திடீரென வெளிப்பட்ட யானையொன்று வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தின்போது சாரதி காயங்களேதுமின்றித் தப்பித்துகொள்ள , அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவியும் கைக்குழந்தையும் காயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.