காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஜெனீவாவில் நீதி கோரும் நடவடிக்கையில்

154

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பங்கெற்பதற்காக ஜெனீவாவிற்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் அங்கு நீதி கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து காணாமற் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அங்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

இதேவேளை காணாமலாக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த உறவுகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்தச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் ஆரம்பித்த போராட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியுடன் 500 நாட்களை எட்டுகின்றது. எனினும் அவர்கள் குறித்த எந்தவொரு தீர்வும் இலங்கை அரசால் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தாம் தொடர்ந்தும் நீதி வேண்டி போராடுவதாக அவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.

SHARE