நீர்வீழ்ச்சியை பார்வையிடச்சென்று காணாமல்போன களனி பல்கலைக்கழக மாணவன் 3 நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கடந்த 14 ஆம் திகதி தனது இரு நண்பர்களுடன் அரநாயக்க பகுதியில் உள்ள அசுபினி நீர்வீழ்ச்சியை பார்வையிடச்சென்றுள்ளார்.
நீர்வீழ்ச்சியை பார்வையிடச்சென்ற குறித்த மாணவன் கால் தவறி நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவன் நீர்வீழ்ச்சியின் ஓடையில் இருந்து 3 நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய தம்மிக்க சம்பத் குருவிட்டகே எனும் களனி பழ்கலைக்கழக மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.