காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை என்ன? ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக குவியும் கடிதங்கள்

169

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மூன்று தினங்களில் 2,750 கடிதங்கள் குவிந்துள்ளன.

தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது வவுனியாவில் 8வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பித்தனர்.

இதன்மூலம் கடந்த 3 தினங்களில் 2,750 பேர் தமது கையொப்பங்களை இட்டு ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான கடிதங்களை வழங்கியுள்ளனர்.

மேலும் அக்கடிதங்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

 

SHARE