காணாமல் போனவர்கள் பற்றிய எந்த தகவல்களும் எம்மிடம் இல்லை – சுமந்திரன் !

266

 

சுமந்திரன் கலந்து கொண்ட காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பான கலந்துரையாடல் காணொளி பார்க்கக் கிடைத்தது. அதில் இந்த சட்ட மூலம் காணாமற்போனோர் என்று சான்றிதழ் கொடுப்பது பற்றி மட்டுமே சொல்கிறார். சிறிய விசாரணை மீண்டும் நடக்குமாம்.

பிறகு காணாமற்போனோரின் சொத்துகளை விற்கலாமாம். வங்கிக்கணக்கில் காசெடுக்கலாமாம். விவாகரத்து கூட பெறலாமாம். ஆனால் காணமல் போகச் செய்தோர் தண்டிக்கப்படமாட்டார்களாம். நட்டஈடும் இல்லையாம். சிங்கள அரசிற்கு நல்லா சொம்படிக்கிறார். இல்லாததெல்லாம் பிறகு சட்டமாய் கொண்டுவருவாராம். நல்லா மிளகாய் அரைக்கிரீயல் சுமன்.

காணாமற்போன இராணுவத்தின் எண்ணிக்கை சொல்லத் தெரிந்த சுமனுக்கு காணாமல் செய்யபட்ட தமிழர்களின் எண்ணிக்கை தெரியாதாம். அந்த தரவும் தங்களிடம் இல்லையாம். சுமந்திரன் என்ன மைத்திரியின் அமைச்சரவை பேச்சாளராய் எப்போது நியமிக்கப்பட்டார்???

SHARE