
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருத்தங்கள் செய்யாது சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு சில திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த திருத்தங்கள் போதுமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.