காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எஸ்.பி. திஸாநாயக்க

237

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சமூக நலன்புரி மற்றும் மலையக உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் அலுவலகம் எவருக்கும் தண்டனை விதிக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.

படைவீரர்களை தண்டிப்பதற்காக இந்த சட்டம் உருவாக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தி வருகின்றார். எனினும் அவ்வாறான எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறப் போவதில்லை.

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படைவீரர்களை காட்டிக் கொடுக்கப் போவதில்லை.

இந்த சட்டத்தின் ஊடாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விபரங்களை அனைவரினாலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த சட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரும் நிவாரணங்களை வழங்க முடியும் என எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

SHARE