காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தில் மேலும் திருத்தங்களை உள்வாங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) இந்தக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட்ட கட்சிகள் கோரியுள்ளன.
எனவே அவற்றுக்கு இடம்தரும்வகையில் அரசாங்கம் இதனை பரிசீலிக்கவேண்டும் என்று சபாநாயகர் கோரியுள்ளார்.
எனினும் குறித்த சட்டம் உரியவகையில் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த சபைத்தலைவர் லச்மன் கிரியெல்ல, சபாநாயகரின் இந்தக்கோரிக்கை தொடர்பில், தாம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேசி முடிவை
அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.