காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

104

 

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று (17.03.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேடுதல் நடவடிக்கை
உயிரிழந்த நபர் கடற்றொழிலுக்காக கடந்த சனிக்கிழமை (16) அன்று தெப்பம் மூலம் கடலுக்கு சென்ற போதே காணாமல் போனதாக தெரிவிக்ப்படுகின்றது.

இந்நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை மூலம் சடலம் மீட்கப்பட்டுள்ளது

SHARE