காணாமல் போயுள்ள மகனை தேடி அலையும் தாய்!

233

missing_promo_titlecard

திகன பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் 5 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.

22 வயதான தனது மகன், 25 வயதான நபர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையிலேயே காணாமல் போயிருப்பதாக குறித்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குறித்த இருவரும் வரகாபொல நகருக்கு சென்றதாகவும் அதன் பின்னர் தனது மகன் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மாதங்களின் பின்னர் தன்னுடைய மகன் என சந்தேகிக்கும் ஒருவரின் சடலத்தை பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர்.

எனினும் அது தனது மகன் தானா என உறுதியாக சொல்ல முடியாது என்றும் தனது மகன் காணாமல் போன விடயத்தில் தனது மகனுடன் தங்கியிருந்த நபர் தொடர்பில் சந்தேகம்இருப்பதாக தெரிவித்து பொலிஸாரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அந்த தாய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE