காணிகளை விரைவில் விடுவிக்க இராணுவம் நடவடிக்கை

114

 

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் கோரிக்கை
சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி முப்படைகளின் வசம் உள்ள நிலையில் , அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE