காணி அபகரிப்புக்கு எதிராக ஜனாதிபதிக்கு சிறிதரன் எம்.பி கடிதம்!

266

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும், காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இந்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களை இழந்து இன்றும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான மீள்குடியேற்றம் என்பது நல்லாட்சி அரசாங்கத்திலும், நத்தை வேகத்தையும் விட குறைவான வேகத்திலேயே இடம்பெறுகின்றது.

இந்நிலையில், வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்து, இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் காணிகளை அபகரித்து வருகின்றனர்.

இவ்வாறு காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளானது கடந்த கால அராஜக அரசாங்கத்தின் ஆட்சியினை நினைவுகூருவதாக அமைந்துள்ளது.

ஒரு ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட காணி அபகரிப்பு வியடத்தினை இன்றைய ஜனாதிபதியாக இருக்கும் தாங்கள் தடுக்க அதிகாரம் உண்டு.

2016ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவேன் என, தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நடை முறைப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் காத்திருக்கும் நிலையில், இக்காணி அபகரிப்பு நடவடிக்கை தங்களின் வாக்குறுதியின் மீது சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.

எனவே, இலங்கையில் கடவுளுக்கு அடுத்தப்படியாக சர்வ வல்லமைகளை கொண்டிருக்கும் தாங்கள் இக்காணி அபகரிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
SHARE