காதலனுடன் சேர்ந்து தனது 5 மாத ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Faversham நகரத்தை சேர்ந்தவர் Katherine Cox (33) இவருக்கு Eli Cox என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவருக்கு Danny Shepherd (25) என்ற நபருடன் இரு வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் குழந்தை Eli படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.
குழந்தை Eli கொடூரமாக தாக்கப்பட்டதும், அவன் உடலில் 28 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதும் பின்னர் தெரியவந்தது.
இதோடு குழந்தையின் தலையிலும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்தையும் மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.
இதற்கெல்லாம் மேலாக குழந்தை Eli-ன் ரத்தத்தில் Cocaine ரக போதை மருந்துகள் கலந்திருந்தது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் இவை அனைத்தையும் செய்தது Katherine மற்றும் Danny தான் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்தார்கள். முதலில் தங்கள் தவறை ஒப்பு கொள்ளாத இருவரும் பின்னர் ஒப்பு கொண்டுள்ளார்கள்.
குழந்தையை அதிகம் கொடுமைப்படுத்தியது இருவரில் Danny தான் என்பதும் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் Danny மற்றும் Katherine இருவரும் குற்றவாளிகள் என்பதை தற்போது நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உளவியல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டவுடன் இருவருக்குமான தண்டனை விபரங்களை நீதிமன்றம் வெளியிடும் என தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் அதிகாரி Ivan Beasley கூறுகையில், இது மிகவும் துயரமான சம்பவம் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க எது போன்ற விடயம் இவர்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது என புரியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.