காதலர் தினத்தில் “காற்று வெளியிடை”

139

ஓகே கண்மணி’ வெற்றி படத்தை அடுத்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊட்டி, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விமான பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜேபாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் படமான உருவாகி வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
SHARE