இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.ரஹானே யூன் 6 ஆம் திகதி, 1988ம் ஆண்டு மஹாராஸ்டிராவில் பிறந்தார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்.
மிகவும் அமைதியான குணம் கொண்டவர். அதே சமயம் கடினமாக போராடும் தன்மை கொண்டவர்.
சாய் பாபாவின் தீவிர பக்தரான ரஹானே, அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவார். இதுவே தனது மனவலிமைக்கு காரணமான விடயம் என்று அவர் கூறுவார்.
7 வயது இருக்கும் போதே அவரது தந்தை அருகில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ரஹானேவை சேர்த்துவிட்டார்.
ஆனால் அங்கு பயிற்சி சரி இல்லை என்பதை அறிந்த அவரது தாய், ரஹானேவை வேறு பயிற்சி மையத்தில் சேர்த்தார். அந்த பயிற்சி மையம் வீட்டில் இருந்து 2கி.மீ தூரத்தில் இருந்தது.
இந்நிலையில் குட்டி பையனான ரஹானேவை அவரது தாய் தினமும் நடந்தே பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் 17 வயதில் அவர் பிரவின் அம்ரே என்பவரிடம் பயிற்சி பெற்றார். இவர் முன்னாள் இந்திய வீரர் ஆவார். இவரும் ரஹானே இந்திய அணிக்குள் நுழைய உதவினார்.

இந்திய அணியில் முன்னணி வீரராக இருக்கின்ற போதும், அவரது பெயர் எந்தவித சர்ச்சையில் சிக்கியதில்லை. ஆனால் இவரது காதல் வாழ்க்கை சில சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது.
இவர் தனது பள்ளித் தோழியான சுவாதி என்பவரை காதலித்து வந்தார். இவர் தான் ரஹானேவை தியானம் செய்ய வலியுறுத்தியுள்ளார். நன்றாக சென்ற இவர்களது காதலில் திடீர் என்று பூகம்பம் வெடித்தது.
ஒருநாள் இருவரும் ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதை சுவாதியின் சகோதரர் பார்த்துவிட்டார்.
இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் சுவாதியின் சகோதரர் சொல்ல, அவர்கள் சுவாதியை விட்டுவிடுமாறு ரஹானேவை மிரட்டியுள்ளனர்.
ரஹானே இதற்காக அடியும் வாங்கியுள்ளாராம். பின்னர் அந்த பெண்ணை விட்டுவிலக முடியாமல் தவித்தார் ரஹானே.
இதற்கிடையில் ரஹானே தனது தோழியான ராதிகா தோபவக்கரை திருமணம் செய்து கொண்டார். ரஹானேவின் காதலி என்ன ஆனார் என்பது தொடர்பான செய்திகள் அப்படியே காணாமல் போகியது. |