காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் காதலிக்கு பரிசளிக்க சென்ற இளைஞன் ஒருவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான்.
காதலில் சில பைத்தியக்காரத்தனம் உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில் மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இளைஞன் ஒருவன் தனது காதலிக்கு பரிசளிக்க முழு காரையும் புதிய 2000 ரூபாய் நோட்டால் அலங்கரித்து சாலையில் ஓட்டிச் சென்றுள்ளான்.
இதைக்கண்டு பொதுமக்களும், பொலிசாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், பொலிசார் காருடன் குறித்த இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.