காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட இந்திய வீரர் ரிஷப் பாண்ட்

629

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களின் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் முதலிடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற இவர் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டம் மற்றும் சிறப்பான கீப்பிங் என அசத்தினார்.

அதுமட்டுமின்றி கீப்பிங் செய்யும் போது, அவுஸ்திரேலியா வீரர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் பேசினார்.

அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் ரிஷப் பாண்ட் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காதலியின் பெயர் இஷா நெகி என குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE