காதலியின் பெற்றோருக்கும் காதலன் கொடுத்த ‘‘ஷாக்’’!

197

ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த இளைஞர் விஜய் (வயது 23). வீரப்பன் சத்திரம், பண்ணக்காட்டை சேர்ந்தவர் இந்துமதி (22.)

விஜய்யும் இந்துமதியும் 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் வளர வளர அவர்களது காதலும் வளர்ந்திருக்கிறது.

காதல் வானில் சிறகடித்து பறந்த விஜய்யும், இந்துமதியும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். இருவரும் அவர்கள் பெற்றோர்களிடம் தங்களது காதலை தெரிவித்தனர்.

ஆனால், இவர்களின் காதலுக்கு இந்துமதியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வேறு வழி தெரியாத இந்துமதி, காதலன் விஜய்யிடம் முறையிட்டிருக்கிறார்.

இதனையடுத்து விஜய்யும், இந்துமதியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அவர்களது திட்டப்படி பவானி கூடுதுறையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து கொண்டிருக்கும் போது இந்துமதியில் பெற்றோர் அங்கு வந்துவிட்டனர்.

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு மகளிர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காதலர்கள் மற்றும் இரு தரப்பினரையும் ஈரோடு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வந்த காதலர்களை போலீசார் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

அப்போது பெண் வீட்டார், “இந்துமதி கழுத்தில்தான் தாலி கட்டவில்லையே.. அதனால் எங்கள் பெண்ணை எங்களிடம் ஒப்படையுங்கள்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போலீசார் காதலர்களை போலீஸ் நிலையம் உள்ளே வைத்து விசாரித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென தன் பையில் வைத்திருந்த தாலி கயிற்றை எடுத்த விஜய் காதலி கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டார். “தாலி கட்டிவிட்டார்.

இதனை எதிர்பார்க்காத பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் எங்கள் பெண்ணை எங்களுடன் அனுப்புங்கள்” என்று கூறினர்.

இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். பிறகு போலீசார் இந்துமதியிடம் கேட்டபோது, “நான் என் காதலனுடன் தான் செல்வேன்” என்று திட்ட வட்டமாக கூறினார்.

இதை தொடர்ந்து காதல் ஜோடியை போலீசார் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர்.

ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த காதல் போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE