காதலில் உருகும் பாகிஸ்தான் மொடல் நடிகை

243

பாகிஸ்தான் மொடல் நடிகை மத்ரா மொகமது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் மொடல் குவாண்டில் பலூச், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அனுஷ்கா சர்மாவை விட்டுவிடுமாறும் அவர் அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மொடல் நடிகை மத்ரா மொகமது இந்திய அணித்தலைவர் டோனி காட்டிய அன்பால் கிளின் போல்ட் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த போது இரு அணி வீரர்களும் தங்கி இருந்த ஹொட்டலில் நான் இரவு உணவு சாப்பிட சென்றேன்.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு ஆட்டோகிராப்ஃப் போட மறுத்துவிட்டனர்.

நான் மீண்டும் மீண்டும் கேட்டதால் அவர்கள் என்னை கடுமையாக திட்டி அனுப்பி விட்டனர். இதனால் நான் மன வேதனையடைந்தேன். இதை எல்லாம் இந்திய அணித்தலைவர் டோனி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது என்னை அழைத்த டோனி, ஆறுதல் கூறிவிட்டு எனது தொப்பியில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். பிறகு என்னை அருகில் அமர வைத்து சிறிது நேரம் உரையாடினார் என்று நினைவு கூர்ந்தார்.

அப்போது இந்த சம்பவம் பாகிஸ்தான் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

SHARE