காதல் பஸ்! திருமணம் ஆகாதவர்களுக்குத் தான் இந்த பஸ்ஸில் இடமாம்!….

550

அதனால்தான், ‘காதல் பஸ்’சை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். ஆபீசுக்கு போனது போலவும் ஆச்சு, அப்படியே பெண் (மாப்பிள்ளை) பார்த்தது போலவும் ஆச்சு.

இந்த ‘காதல் பஸ்’சில் ஏறுபவர், தனக்குப் பிடித்த வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளலாம். உடன், சுடச்சுட காலை சிற்றுண்டி, பானங்கள் வழங்கப்படும். சாப்பிட்டபடி, பானம் பருகியபடி எதிரே உள்ள வரனுடன் பேசலாம். ‘இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று தோன்றினால், வேறொரு இருக்கைக்கு மாறி அடுத்தவருடன் பேச ஆரம்பிக்கலாம். ஒவ்வொருவருடன் பேச, ஐந்து நிமிட கால அவகாசம்.

சும்மா பரபரப்பைக் கிளப்புவதற்காக இப்படி ஒரு பஸ்சை விட்டிருப்பார்களோ என்று தோன்றினாலும், மிகுந்த ஆய்வுக்குப் பின்தான் இம்முயற்சியில் இறங்கியதாக‘மேட்ச்டாட்காம்’ நிறு வனத்தினர் கூறுகிறார்கள்.

‘‘இங்கிலாந்தில் திருமணமாகாதவர்களில் 55 சதவீதம் பேர், ‘டேட்டிங்’குக்கு நேரமில்லை என்று கூறுகிறார்கள். அதிலும், நாளெல்லாம் பரபரவென்று இயங்கிக் கொண்டிருக்கும் லண்டன்வாசிகள், தங்களின் அன்றாட நெருக்கடியில் ‘டேட்டிங்’கை நினைத்துப் பார்க்கவே முடியாது என்கிறார்கள்.

அவர்களை மனதில் வைத்துத்தான் இந்த பஸ்சை இயக்க ஆரம்பித்திருக்கிறோம். இங்கே நீங்கள் பஸ்சில் ஏறலாம், ஆரோக்கியமான உணவை உண்டபடி பிடித்த நபருடன் பேசலாம். ஆபீசுக்கு போய் இறங்குவதற்கு முன் வாழ்க்கைத் துணையை முடிவு செய்துவிடலாம்!’’ என்று எளிமையாகக் கூறுகிறார்கள்.

ஒரு மாதத்துக்கு இந்த சேவை இலவசமாகக் கிடைக்கும் என்பது கூடுதல் விசேஷம். லண்டன்காரங்க கொடுத்து வைச்சவங்கப்பா என்று தோணுதா?…

– See more at: http://www.manithan.com/news/20160823121259#sthash.rFJiOxQh.dpuf

SHARE