காத்தான்குடி கழிவுகள் ஆரையம்பதிக்குள்.

327

 

காத்தான்குடி கழிவுகளை ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுவதால் ஆறு மாசடைவதாகவும், மாட்டு எலும்Arayampathi 01புகள் போன்ற கழிவுகள் ஆற்றில் கலப்பதால் அதனை உண்பதற்காக வரும் முதலைகளால் அருகில் உள்ள மனைகளில் குடியிருப்பவர்கள் அச்சத்துடன் வாழ்வதாக ஆரையம்பதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் முன்வரவேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ​மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டார்..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப் பிரதேச மக்களுடன் கலந்துரையாடி தேங்கி உள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.Arayampathi 02Arayampathi 03

SHARE