காப்பகத்தில் குழந்தைகளை கடத்தி விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

261

இந்தியாவின்  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி எனும் பகுதியில் செயற்பட்டு வரும் காப்பகம் ஒன்றில் உள்ள குழந்தைகளை கடத்தி விற்றதாக இரு கன்னியாஸாதிரிகளை கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மிஷனரிஸ் ஒப் சாரிட்டி அமைப்புக்கு சொந்தமான, நிர்மல் ஹ்ரிடே எனும் காப்பகம் செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் கருவுற்றிருக்கும் 11 சிறுமிகள் 75 மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளனர்.

திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு இங்கு அடைக்கலம் தரப்படுகிறது. இந்த காப்பகத்தில் சிறுமிகளுக்கு பிறந்த குழந்தையை வேறு ஒருவருக்கு .50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ததாக கன்னியாஸ்திரி கொஞ்சிலியா என்பவர் உட்பட 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுாடு காப்பகம் இலுத்து மூடப்பட்டுள்ளது

இதுகுறித்து ராஞ்சி பொலிஸ் உயரதிகாரி ஷியாம்நாத் மண்டல் தெரிவிக்கையில், மொத்தம் 4 குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு குழந்தை உ.பிக்கும், மேலும் 3 குழந்தைகள் ஜார்கண்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

11 சிறுமிகள் வேறு ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகம் மிஷனரிஸ் ஒப் சேரிட்டி என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் இந்த அமைப்பிற்குச் சொந்தமாக வேறு சில காப்பகங்களும் செயல்பட்டு வருகின்றன என்றும், இருப்பினும் அந்த காப்பகங்களுக்கு சிறுமிகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தை குழந்தைகள் நல மைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர் விதிமுறைகளின்படி திருமணமாகாத குழந்தைகளை பாதுகாப்பதற்கு குழந்தைகள் நல மையம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE