காமக் கொடூரனிடமிருந்து சிறுமியை காப்பாற்றிய அகதிகள்

282
கீரிஸ் நாட்டிலுள்ள அகதிகள் முகாமை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அகதிகள் அடித்து இழுத்து சென்று பொலிசில் ஒப்படைத்தனர்.ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர்  கிரீஸ் நாட்டின் வழியாகவே வருகின்றனர்.

கிரீஸில் அண்டை நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதால் ஏராளமான அகதிகள் கிரீஸ்– மெசிடொனியா எல்லையருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முகாமை சேர்ந்த அகதிகள் ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையறிந்த மற்ற அகதிகள் அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அடித்து இழுத்து சென்று பொலிசிடம் ஒப்படைத்தனர்.

தற்போது சுமார் 45 ஆயிரம் அகதிகள் வரை கிரீஸ் நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE