காமவெறியர்களின் வெறியாட்டம்… 20 வயது தாயின் கண்முன்னே பலியான 9 மாத குழந்தை

267

டெல்லியில் ஷேர் ஆட்டோவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இளம் பெண், கொலை செய்யப்பட்ட தனது 9 மாத குழந்தையுடன் மெட்ரோ ரயிலில் தனியாக பயணம் செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ம் தேதி இரவு 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது 9 மாத குழந்தையுடன், அவருடைய பெற்றோர்களின் வீட்டிற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது அந்த ஆட்டோவில் ஓட்டுநரை தவிர வேறு இருவர் இருந்துள்ளனர். ஆட்டோவில் அந்த இளம்பெண் ஏறியவுடன் அந்த மர்ம நபர்கள் இருவரும் அந்த பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், மேலும் 9 மாத குழந்தையும் அழ ஆரம்பித்துள்ளது. மர்ம நபர்களின் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்த குழந்தையை அவர்கள் வெளியே தூக்கி வீசியுள்ளனர். இதில் தலையில் அடிப்பட்ட அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குழந்தையின் 20 வயது தாயையும் அவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை நள்ளிரவு 2 மணிக்கு யாரும் இல்லாத சாலையில் தனியாக விட்டுவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். பின்னர் சாலையில் வீசப்பட்ட குழந்தையை தேடி கண்டுபிடித்து அதனுடன் விடியும் வரை சாலையில் காத்திருந்துள்ளார். அப்பொழுது அந்த குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் காலையில் மெட்ரோ ரயிலில் குழந்தையின் உடலுடன் ஏறி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த தாய் குழந்தையுடன் வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கேயும் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே மூன்று கொடூரர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண், அவருடைய குழந்தையும் இறந்துவிட்டதை கேள்விப்பட்டு மிகுந்த சோகத்தில் ஆழந்தார். பின்னர் அவருடைய கணவருடனும், உயிரற்ற குழந்தையையும் கையில் ஏந்திக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.manithan.com/news/20170607127564#sthash.0e5ZthuH.dpuf

SHARE