ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகியது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் பொதுக்கூட்டத்தில் 27 உறுப்பின நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்,
இதில் கலந்துகொண்டு பேசிய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தனது காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிச்செல்லக்கூடாது என யூனியன் சார்பில் பல்வேறு கருத்துக்கள் பிரித்தானியாவிற்கு எடுத்துக்கூறப்பட்டன.
இருப்பினும், பிரதமர் டேவிட் கமெரூன் பிரிந்து செல்ல விரும்பாவிட்டாலும், அந்நாட்டு மக்கள் பிரிந்துசெல்லவே விரும்பியுள்ளனர், எனவே நடந்துமுடிந்த இந்த பொதுவாக்கெடுப்பால் பிரித்தானியா விலகியது குறித்து நாம் மேற்கொண்டு விவாதிக்க வேண்டியதில்லை.
ஏனெனில், மீண்டும் மீண்டும் இதனை நாம் விவாதிப்பதன் மூலம், பிற நாடுகளும் இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதற்கு வழிவகுக்கும், எனவே நடைபெறும் ஐரோப்பிய யூனியன் கூட்டங்களில் இதுகுறித்து விவாதிக்க வேண்டியதில்லை.
அதுமட்டுமின்றி பிரித்தானியா விலகவிருக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வரைக்கும், அந்நாட்டுக்கு ஐரோப்பிய யூனியனில் எல்லா உரிமைகளும், சலுகைகளும் உள்ளன, அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
அதுபோன்று ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிச்சென்றாலும் பொருளாதார ரீதியான உறவுமுறையை பிரித்தானியா மேற்கொண்டு தொடரலாம், ஐரோப்பிய யூனியன் தொடங்கியபோது இந்த 27 நாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தினை இதுவரை கடைபிடித்து வந்தோம், இனியும் கடைபிடிக்க வேண்டும் என மெர்க்கல் கூறியுள்ளார்.