மஸ்கெலியா நகர 4ஆம் வீதியில் இன்று மதியம் 12மணியளவில் காருடன் முச்சக்கர வண்டி ஒன்று நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் காயங்களுடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு முச்சக்கர வண்டியும் காரும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மஸ்கெலியா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.