நீண்ட காலமாக மக்களின் வேண்டுகோளாக காணப்பட்ட வடிகான்கள் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் த.மோகனதாஸ் வட்டாரத்திலிருந்து தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்தகைய வடிகான் சுத்தம் செய்யும் வேலைகளை மாரிக்கு முன் செய்து முடிக்க வேண்டுமென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அமைவாக இன்று இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.