காருக்குள் சிக்கிய குழந்தையின் அழுகையை நிறுத்தி தூங்க வைக்க போலிஸார் நடத்திய நூதன திட்டம் பார்வையாளர்களை விபப்பில் ஆழ்த்தியது.
ஜேர்மனியின் Hesse பகுதியில் இருந்து பொலிஸாருக்கு ஒரு அவசர தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் வாகந்த்தினுள் தமது குழந்தை சிக்கியுள்ளதாகவும், வாகனத்தை திறந்து குழந்தையை மீட்க உதவ வேண்டும் என்றும் ஒரு பெண் கோரிக்கை வைத்தார்.
குறித்த சம்வத்தின்போது குழந்தையுடன் தனது காரில் தாயார் ஒருவர் கடைக்கு சென்றுள்ளார். குழந்தை அசதியில் தூங்கியதால் அவர் குழந்தையை காருக்குள் விட்டு விட்டு வெளியே இறங்கியுள்ளார்.
ஆனால் திடீரென்று ஓட்டுநர் பக்கத்தில் உள்ள கதவு மூடிக்கொண்டது.. மட்டுமின்றி அது சாவியால் மட்டுமே திறக்கும்படி பூட்டிக்கொண்டது. இதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது குழந்தையை காரினில் நின்று மீட்கும் பொருட்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
காரணம் அவரது காருக்கான மற்றொரு சாவி வீட்டில் உள்ளது. வீட்டுக்கான சாவி கைப்பைக்குள் உள்ளது, கைப்பை காரினுள் உள்ளது.
இதனிடையே சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர். அப்போது குழந்தை காருக்குள் இருந்து அழத்துவங்கியிருந்தது. குழந்தையின் தாயாரோ செய்வதறியாது கலக்கமடைந்து நின்றுள்ளார்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிஸார் உடனடியாக Offenbach தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரை வரவழைத்தனர். மட்டுமின்றி பூட்டுகளை திறக்க பயிற்சி பெற்ற நபர் ஒருவரையும் உடனே அனுப்பி வைக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
பூட்டு திறக்கும் நிபுணர் வரும் வரையில் குழந்தையை சாந்தப்படுத்த பொலிஸார் முயற்சி மேற்கொண்டனர். திடீரென்று ஒரு பொலிஸார் ஒருவர் குழந்தை சிக்கியுள்ள காரினை தொட்டில் ஆட்டுவது போல மெதுவாக குலுக்கத் துவங்கியுள்ளார்.
இதில் குழந்தை அழுவதை நிறுத்துவதை கவனித்த எஞ்சிய பொலிஸாரும் அதுபோலவே செய்துள்ளனர். சில நிமிடங்களில் குழந்தையும் தூங்கியுள்ளது.