கார்த்தியின் ஜப்பான் படம் இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?..இதோ முழு விவரம்

109

 

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ஜப்பான்.

தீபாவளி ஸ்பெஷலாக ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். மேலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சுனில், விஜய் மில்டன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வசூல்
இந்நிலையில் ஜப்பான் படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இப்படம் இதுவரை ரூபாய் 28 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

SHARE