கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடித்து வரும் படம் ஜுங்கா. படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஜுங்கா படத்தின் படக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாடல் காட்சிகள் படமாக்குவதற்காக குளு குளு மலைகளில் படக்குழு முகாமிட்டுள்ளது. காமெடி, ஆக்ஷன், காதல், என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஜுங்கா உருவாகி வருகிறது.
இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக மேயாத மான் படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேயாத மான் படத்தில் பிரியா பவானி சங்கரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.