கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு பேர் நடித்து வருகிறாரக்ள். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் இந்திய அளவில் முதல் முறையாக இப்படத்தில் புதிய டெக்னாலஜி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெறும் குறிப்பிட்ட சில காட்சிகளைப் படமாக்குவதற்காக 360 டிகிரிகள் சுழலும் ‘ஆம்னி டைரக்ஷனல்’ கேமரா ரிக் ஒன்றை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
முதலில் இப்படத்தில் இடம்பெறும் குறிப்பிட்ட காட்சிகளை படமாக்க முடியாது என்று நினைத்து அந்த காட்சிகளுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தனர். பின்னர் 360 டிகிரிகள் சுழலும் கேமரா டெக்னிக் பற்றித் தெரிந்ததும் அந்த டெக்னாலஜியை இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர்