அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய ஒரு மணி நேரத்திலே இளம்பெண் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மண்டுரா பகுதியை சேர்ந்தவர் 17 வயதான கிம்பர்லி பிளெண்டன் என்ற இளம்பெண்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார்.
பின்னர் தன்னுடைய தோழிகள் இருவருக்கு, ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டதாக மெசேஜ் செய்து, கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மகிழ்ச்சியை கொண்டாட வேகமாக கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த மூன்று பேரும் திடீரென விபத்தில் சிக்கினர். இதில் கிம்பர்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த அவருடைய இரு தோழிகளையும் மீட்டு ராயல் பெர்த் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிஸார் பேசுகையில், ஓட்டுநர் உரிமம் வாங்கிய மகிழ்ச்சியில் கிம்பர்லி அதிவேகத்தில் கார் ஓட்டியிருக்க வேண்டும். இதில் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் வேகமாக சுழன்று விபத்து ஏற்பட்டிருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.