நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து ஒரு சொகுசு கார் கோவையை நோக்கி வந்தது. காரில் டிரைவர் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த கார் இன்று காலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் கோவை – ஈரோடு 6 வழிச்சாலையில் ஒரு பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. பஸ் மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் பலியானார்கள்.
இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் அவினாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காருக்குள் இறந்து கிடந்த 5 பேரின் உடல்களை அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் காயம் அடைந்த கார் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்தான கார் அரசு வாகனம் என்றும், அமைச்சர் ஒருவரது உறவினர்கள் பயணித்தனர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.