விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி.
இந்த சீரியலில் சூர்யா மற்றும் வெண்ணிலா திருமணம் செய்துகொண்ட பிறகு அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது.
கிளைமாக்ஸ் ப்ரொமோ
இந்நிலையில் வரும் வாரத்தோடு காற்றுக்கென்ன வேலி முடிவடைய இருக்கிறது. கிளைமாக்சில் வர இருக்கும் ட்விஸ்ட் என்ன என்பது தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
வெண்ணிலா தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்க தொடங்கும் நேரத்தில் சூர்யா சரியாக அங்கு வந்து சேர்கிறார். அவர் வெண்ணிலாவை காப்பாற்றுவாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ் எபிசோடு ஒளிபரப்பாகும் போது தான் தெரியவரும்.