காற்றோட்டமாக உடற்பயிற்சி உடலுக்கு நல்லது

733
குளிர் காலத்தில், வெளியில் குளிராக இருந்தாலும் கூட புத்தம் புதிய காற்று நமக்கு தரும் உணர்வு மிக சிறப்பானது. ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் புதிய காற்றினை உணர்வது நமக்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. குளிர் காலத்தில் வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாம் இவற்றை சாத்தியமாக்கி கொள்ளலாம். 
இதயத்திற்கான பயிற்சிகளை வெளியில் மேற்கொண்டு பின்பு உள்ளே யோகா ,எடை தூக்குவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதற்காக வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று அர்த்தமில்லை. குளிர்காலமாக இருந்தாலும் வெளியில் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அர்த்தமில்லை.

நாம் அவற்றை தவிர்த்து விடலாம் எனினும் தட்ப வெப்ப நிலை ஏற்று கொள்ள கூடிய வகையில் உள்ள நாட்களை நமக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். நம்பினாலும் நம்பாவிட்டாலும்,வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகிறது.

நமது நோய் எதிர்ப்பு மண்டலம். களைத்து போகும் போது, மன சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதை தவிர்த்து நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி உள்ளிட்ட சில பயிற்சிகளை சில நிமிடங்களாவது வெளிப்புற பகுதியில் மேற்கொள்ள வேண்டும்

வெளிப்பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கும் என்று கூறப்படுவதற்கு மற்றொரு சிறப்பான காரணம் தசை கட்டுமானம் ஆகும். பொதுவாக ட்ரெட் மில்லில் உடற்பயிற்சி செய்யும் போது தவிர்க்கப்படும் ஒன்றான தசை கட்டுமானத்திற்கு இது உதவுகிறது.

தசைகள் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது உடலின் மெட்டாபாலிசம் மேம்படுத்தப்பட்டு, அதிக ஆற்றல் பெறப்படுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ளாமலேயே இயல்பாகவே, மனச்சோர்வு தடுக்கப்படுகிறது, ஒரு நாளின் துவக்கத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி அந்நாளின் எஞ்சியுள்ள பொழுதை அற்புதமாக்கிவிடுகிறது.

எனவே வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த ஒன்றாகும். மேலும் சரிவான மலை பிரதேசங்களில் பயிற்சி மேற்கொள்ளும் போது, நமது ட்ரெட் மில்லின் கைப்பிடியை சார்ந்திருப்பது அவசியமற்றதாகிவிடுகிறது. நமது உடலின் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது.

வெளிப்புற பகுதியில் உடற்பயிற்சி மேற்கொள்வது மனச்சோர்வினை தடுக்கிறது என்று கூறப்படுவதற்கு மற்றொரு தனித்துவமான வழி யாதெனில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதே பருவ நிலை மாற்றதை காண முடியும் என்பது தான்.

குளிர் காலத்தில் வெளியில் உடற்பயிற்சி செய்வது என்பது வேடிக்கையானது அல்ல. ஒருமுறை செய்ய ஆரம்பித்த பிறகுகாற்றோட்டமில்லாத நச்சு காற்றினை தவிர்த்து நமக்கு மகிழ்ச்சியை தரும். இத்தனை அதிகமான பலன்கள் கிடைக்கும் போது உடற்பயிற்சி மேற்கொள்ள இயந்திரங்களை சார்ந்திருப்பதை விடுத்து இயற்கையை சார்ந்து இருப்போமே.

SHARE