காலத்திற்கு முந்திய தெரிவு- வடமாகாண சபை மாங்குளம் வர வேண்டும் :- வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் இடித்துரைப்பு.

343

 

வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டிடமும் மாகாண சபை அமர்வுக்கட்டிடமும் மாங்குளத்தில் தான் அமைய வேண்டும் என்பது காலத்திற்கு முந்திய தெரிவு. அதற்காக பல நியாயபூர்வமான காரணங்கள் அடையாளம்  காணப்பட்டிருந்தன. மாங்குளம் என்பது சகல மாவட்டங்களுக்கும் ஒரு மத்திய நிலையம். வவுனியாவிலிருந்து மாங்குளம் 45கி.மீ தூரமும், முல்லைத்தீவு நகரிலிருந்து 49 கி.மீ தூரமும், கிளிநொச்சி நகரிலிருந்து 27கி.மீ தூரமும், யாழ்ப்பாணத்திலிருந்து 100கி.மீ தூரமும், மன்னாரிலிருந்து 110கி.மீ தூரமும் ஆகும்.
ஆனால் இன்று சகல மாவட்ட மக்கள் மட்டுமல்லாது அரசியல் வாதிகளும் யாழ்ப்பாணம் தவிர்த்து 100ற்கு மேற்பட்ட கி.மீ பயணம் செய்து தங்களது தேவைகளுக்காக யாழ்ப்பாண நகரம் எங்கும் திணைக்களங்களையும் அமைச்சு காரியாலங்களையும் தேடி அலைந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
மக்களுக்காக… என தொடங்கிய மாகாண சபை இறுதியில் தமக்காக மட்டுமே என்ற தொனிப்பொருளில் இயங்கத்தொடங்கியதுதான் மக்கள் அடைந்த முதல் ஏமாற்றம். இலகுவாக மக்கள் அமைச்சர்களை சந்திக்க முடியாமையும் இலகு போக்குவரத்து இன்மையும் அமைச்சுக்களின் அலுவலகங்கள் மாவட்டங்களிலும், பிரதேசங்களிலும் சிதறிக்கிடந்தமை என பல விடயங்கள் மக்களை வடக்கு அமைச்சர்களிலிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றது.
இது தொடர்பில் நான் வட மாகாண சபையில் இருந்த போது மாங்குளத்திற்கு வடமாகாண சபை வர வேண்டுமென்று ஒரு பிரேரணை நிறைவேற்ற முற்பட்டேன். அப்போது முதலமைச்சர் மாங்குளத்தில் வடக்கு மாகாண சபை செயற்பாடுகள் இருப்பது சாத்தியமh என;பதை நிபுணர் குழு மூலம் ஆராய விரும்புவதாக தெரிவித்தார். யார் அந்த நிபுணர் குழு என்பதற்கு இன்னமும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. எப்போது அவர்கள் ஆய்வு செய்தார்கள்? எப்படி ஆய்வு செய்தார்கள்? அந்த குழுவில் நிபுணத்துவம் வாய்ந்த துறைசாரார் இருந்தார்களா? அவர்கள் பெயர் பட்டியல் என எதுவுமே வழமை போல் வெளியிடப்படவில்லை.
மாங்குளத்தில் வடக்கு மாகாண சபை அமைந்தால் யாழ்ப்பாணம், கிளிநொச்ச்சி, மன்னார்,முல்லைத்தPவு, வவுனியா போன்ற பிரதேச மக்கள் யாவருக்கும் இலகுவாக தேவைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள இலகுவாயிருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் புலிகளும் அதைத்தான் விரும்பினார்கள் என்பதுதான் உண்மை.
மக்களின் தேவைகள் அதிகமாகவே வடக்குமாகாணசபை அமைச்சர்களிடம் இருக்கிறது. .அனால் அதை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாத சூழல் தான் வலுப்பெற்றுள்ளது. இந்நிலை மாற வேண்டும். மத்திய அமைச்சரையோ பாராளுமன்ற உறுப்பினரையோ சந்திக்கும்  இலகுதன்மை வடமாகாண நிர்வாக அலகை சந்திப்பதில் இல்லை என்பது யாவரும் அறிந்ததே. காரணம் ஒவ்வொரு அமைச்சு காரியாலயங்களும்இ ஒவ்வொரு வட மாகாண சபை பணிப்பாளர் காரியாலயங்களும் யாழ்ப்பாண நகரம் எங்கும் பரவி காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது வருடாந்தம் பெருந்nதhகை நிதி காரியாலய வாடகை என்ற பெயரில் செலவு செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு சேர வேண்டிய வடமாகாண சபை நிதி பெருமளவில் வீண்விரயம் செய்யப்படுகிறது. மாங்குளம் என்ற மத்திய நிலையத்தில் வட மாகாண சபையின் சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளடக்கிய காரியாலயம் அமைய நாம் முயற்சிக்கவில்லையெனின் நீண்ட கால அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் விடும் தவறாகவே வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்நிலை மாற்றப்பட்டு முதலமைச்சர் இதை தனது மேலான  கருத்தில் கொண்டு மாங்குளத்திற்கு வடக்கு மாகாண சபையை மாற்றி வடக்கு தமிழ் மக்களின் வாழ்வியலில் பாரிய ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வருவதற்காக உழைக்க வேண்டும். போரின் வடுக்களை இன்னமும் சுமந்து வாழும் வடக்கு தமிழ் மக்களை வீதியில் இறங்கி இனங்கண்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து மதிப்பளித்து சேவை செய்ய வேண்டும். இது தமிழ் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.
இன்னமும் மக்கள் பற்றி நாம் சிந்திக்க தவறி செயலாற்றினால் வரலாறுகளும் ஆன்மாக்களும் எந்த ஒரு தமிழ் அரசியல் வாதியையும் மன்னிக்காது.
 16a985a6-9eca-4cd7-b200-6c5890c6b3b7
SHARE