காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

122

இலங்கை காலநிலையில் நாளை முதல் மாற்றம் நிகழவுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கு பொருத்தமான வளிமண்டல நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி உதேனி வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இன்றைய தினம் மழையற்ற நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE