காலாவதி திகதியின்றி சொக்லட் விற்பனை – 50000 ரூபா அபராதம்!

259

கண்டியில் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாத சொல்கலட்டுக்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

கண்டி நகரில் அமைந்துள்ள பாரிய வர்த்தக கட்டிட தொகுதி ஒன்றில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சொக்லட் பெட்டியொன்றில் அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சபை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சபை அலுவலக அதிகாரிகளினால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக கண்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணை செய்த போது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு கண்டி நீதிமன்ற நீதவான் சானக்க கலன்சூரிய 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்மானித்துள்ளார்.

Cadburys Dairy Milk Chocolate Bars (Fair Trade) Supplied for non exclusive, editorial UK print, web and PR use only. Copyright-Tom Stockill-All Rights Reserved. (+44 (0)1753 862508 /+44 (0)7831 815511). Fees applicable. This image must not be syndicated or transferred to other systems or third parties, and storage or archiving is not permitted. Any unauthorised use or reproduction of this image will constitute a violation of copyright.

SHARE