காலா டீசர் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள்

178

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் காலா. இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் இந்த படத்தின் டீசரை நாளை வெளியிடவுள்ளார், காலா டீசர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரவுள்ளதாம்.

யு-டியூப் மட்டுமின்றி பேஸ்புக் பக்கத்திலும் இந்த டீசர் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

கபாலி டீசரில் நெருப்புடா பிஜிஎம் போலவே காலா டீசரிலும் செம்ம பிஜிஎம் ஒன்று உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை சொல்லும் வகையிலேயே டீசரில் வசனம் இருக்குமாம், இப்படத்தில் ரஜினியின் பெயர் காலா சேட்டு என்று கூறப்படுகின்றது.

டீசர் இன்று நள்ளிரவு வராமல் நாளை காலை அல்லது மாலையில் தான் வரும் என கூறப்பட்டுள்ளது.

SHARE