76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்பதே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தொனிப்பொருளாகும்.
இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கறுப்பு தினமாக சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது.

ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தன.
இலங்கை சுதந்திர தினம்:
அந்த வகையில், இலங்கை சுதந்திரம் பெற்று நேற்றுடன் (4.2.2024) 75ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலில் அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தனே தலைமையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளின் தூதர்கள் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
