காலி கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்ற ஐவர் மாயம்!

279
கொழும்பு – காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 5 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…

கடந்த வியாழன் (28) ஆம் திகதி ஆறு மீனவர்களுடன் குறித்த படகு ஆழமான கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றதுடன், இதில் சென்ற ஒருவர் உயிர் தப்பியுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகானது கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் ஹிக்கடுவ மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE