காலி – வந்துரம்ப, கிம்பகிந்த பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அங்கு பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடியால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புதிய உரிமையாளரின் கீழ் குறித்த கல்குவாரி இன்று மீண்டும் திறப்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த வேளை அதற்கு பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சுமித தேரருக்கும், புவியியல் ஆய்வு பணியகத்தின் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட இணக்கத்தை தொடர்ந்து எதிர்ப்பு கைவிடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.