காலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!

176

காலை உணவு உடலுக்கு ஆற்றல் தரும் என்பதால், அதனை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

அதுவும், காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், தவறாக தெரிவு செய்யப்படும் காலை உணவுகள் உடல் உபாதைகளை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எனவே வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பப்பளிமாஸ் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆனால் இது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றதல்ல. ஏனெனில் இது அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

கார உணவுகள்

காரமான உணவுகள் உடலுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் இரைப்பையின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்படும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

தக்காளி

தக்காளியில் டானிக் அமிலம் உள்ளது. இது வயிறு மற்றும் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தக்காளியை சாப்பிடாதீர்கள்.

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் சளிச்சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

SHARE